போலீஸ்காரர் கேட்ச்! உயிர் பிழைத்தது குழந்தை!!

கெய்ரோ:பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை போலீஸ்காரர் சரியாகப்பிடித்து காப்பாற்றினார்.
மெய்சிலிர்க்க வைக்கும் இச்சம்பவம் நடந்தது எகிப்து நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது.அங்குள்ள விமான நிலையத்தின் அருகே பாஸ்போர்ட் சரிபார்க்கும் அலுவலகம் இயங்கி வருகிறது.
அங்கு 2வயது குழந்தையுடன் பெண் ஒருவர் வந்தார்.
அதிகாரிகளுடன் அப்பெண் பேசிக்கொண்டிருந்தபோது குழந்தை அலுவலகத்தை விட்டுவெளியே வந்தது.
அங்கு விரிக்கப்பட்ட தரைவிரிப்பில் சிக்கி பால்கனியில் தொங்கியது.

எந்த நொடியிலும் விழுந்துவிடலாம் என்ற நிலையில் குழந்தை கதறியது.
அலுவலகத்தின் கீழே நின்றுகொண்டிருந்த காவலர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

ஒரு அதிகாரி கீழே குழந்தை விழும்போது அலேக்காக பிடித்து காப்பாற்றினார்.
துரிதமாக செயல்பட்ட அவரை அப்பகுதியினர் அனைவரும் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here