அம்ருதா ஒரு மோசடி பேர்வழி! பதில்மனுவில் தீபா காட்டம்!!

சென்னை:ஜெயலலிதாவின் வாரிசு என்று தன்னை அறிவிக்க கோரிய அம்ருதா மோசடி பேர்வழி என்று தெரிவித்துள்ளார் தீபா.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் பெங்களூர் அம்ருதா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு நான். ஜெயலலிதாவின் உறவினர் ஷைலஜா என்னை வளர்த்துவந்தார். இந்த தகவல் சமீபத்தில் எனக்கு தெரியவந்தது.
இதனை ஜெயலலிதா உடலில் டிஎன்.ஏ. பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும்.ஜெயலலிதா உடலுக்கு முறையான இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மனுவில் அம்ருதா கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு, ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயகுமாரின் மகன் தீபக் மற்றும் மகள் தீபா இருவரும் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பிப்ரவரி 1ஆம் தேதி தீபக் பதில் மனு தாக்கல் செய்தார்.  இன்று தீபா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
‘எனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே, அவரது மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார் அம்ருதா.

எனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,’அம்ருதா ஒரு மோசடி பேர்வழி என்று தீபா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here