ஏர்செல் சிக்கல் மேலும் 100 மணிநேரம் நீடிக்கும்! தீர்வுக்கு இதோ வழி இருக்கு!!

சென்னை: ’சி யூ ஆன்லைன்’ என்று விளம்பரப்படுத்தி வந்த ஏர்செல் நிறுவனத்தின் சேவை கடந்த 4 தினங்களாக சிக்கலை சந்தித்துள்ளது.வாடிக்கையாளர்கள் இணைப்புகள் கிடைக்காமல், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது தவிக்கின்றனர்.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் இதுகுறித்து கூறுகையில்,
தமிழகத்தில் ஏர்செல் சேவை 100மணி நேரத்துக்குப்பின் சீராகும்.

 ஏர்செல் நிறுவனம் கடன்சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
நிறுவனம் திவாலாகிறது என்று வரும் செய்திகளில் உண்மையில்லை.
வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு மாற விரும்பினால் அவர்களுக்கு எம்.என்.பி எண் அளிக்கப்படும் என்றார்.

வேறு ஒரு செல்போன் நிறுவனத்தின் சேவையை நம்பரை மாற்றாமல் பெற எம்.என்.பி கோட் எண் அவசியம்.  எம்.என்.பி கோட் எண்ணை எஸ்.எம்.எஸ். செய்தும் பெறலாம்.
PORT என்று டைப் செய்து அதனைத்தொடர்ந்து உங்கள் செல்போன் நம்பரை டைப் செய்யவும்.
இந்த மெசேஜை 1900க்கு அனுப்பிவைக்கவும். 6இலக்க நம்பர் பதில் கிடைக்கும்.
இதனை ஆதார் எண்ணுடன் கொண்டுசென்று புதிய நிறுவனத்தின் சேவையை பெறமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here