பள்ளி குழந்தைகள் மெயில்! டெல்லி ஆசிரியர்கள் தவிப்பு!!

டெல்லி:பலாத்காரம் செய்துவிடுவேன் என்று பள்ளி ஆசிரியை ஒருவரை மாணவர் மிரட்டிய சம்பவமும், ஆசிரியரை பார்ட்டிக்கு மாணவி அழைத்த சம்பவமும் டெல்லியில் நடந்துள்ளது.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயும், குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயும் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இக்காலத்து குழந்தைகள் அன்பு வட்டத்துக்கு வெளியேவந்து எலக்ட்ரானிக் சாதனங்களோடு நட்புகொள்ள முடியாமல் அவற்றால் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகின்றனர்.

டெல்லி குருகிராம் பள்ளியில் ஏழாவது வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியைக்கு ஈமெயில் அனுப்பியிருந்தார். அதில் ஆசிரியை மற்றும் அவர் மகளை பலாத்காரம் செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
தனது மகளை வேறொரு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.இதேபோன்று அதேபள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வகுப்பு ஆசிரியருக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கேண்டில் லைட் பார்ட்டிக்கு வாங்க. அப்படியே நாம் உல்லாசமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.இச்செய்திகள் வெளியாகி சமூக நல ஆர்வலர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் என்ற புனிதமான உறவை களங்கப்படுத்தும் வகையில் குழந்தைகள் நடந்துகொள்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்.பெற்றோர்கள் குழந்தைகள் மீது தினமும் கவனமும், அன்பும் செலுத்தவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here