மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுகப்படுத்தினார் கமல்!

மதுரை: நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்தினார்.
கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து சொந்த ஊரான பரமக்குடி சென்றார். அங்கிருந்து மதுரை வந்தார்.மதுரையில் டெல்லி முதல்வர், சட்ட அமைச்சர் ஆகியோர் கமல் கட்சி துவக்கவிழாவில் பங்கேற்க வந்திருந்தனர்.
அவர்களை வரவேற்று விழாமேடைக்கு அழைத்து வந்தார்.இரவு 7.30க்கு கட்சியின் கொடியை 40அடி உயர கம்பத்தில் ஏற்றிவைத்து கொடி மரியாதை செய்தார்.

கமலின் கட்சி கொடியில் வெள்ளை நிற பின்னணியில்6கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அவற்றின் இடைவெளியில் கருப்பு நிறமும் அதில் 6கோண வெள்ளை நட்சத்திரமும் உள்ளது. 

பின்னர் தனது கட்சியின் பெயர் மக்கள்நீதி மய்யம் என்று அறிவித்தார்.
சிலமாதங்களாக நடந்துவரும் சம்பவங்களால் சமைத்த சோறு இந்த கட்சி என்று தெரிவித்தார்.
ஊழல் கரங்கள் இதனைத்தீண்டினால் கை பொசுங்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here