கமல் மீது தொடரும் அர்ச்சனை !

சென்னை:அரசியல் பயணத்தை துவக்கியுள்ள நடிகர் கமலஹாசனை அர்ச்சிக்க துவங்கியுள்ளனர் அரசியல் பிரபலங்கள்.
திராவிட அரசியலை மீண்டும் தூக்கிப்பிடிக்குவிதமாக புதிய கட்சியை இன்று மதுரையில் அறிவிக்கிறார் கமல்.இதனைத்தொடர்ந்து அவரை பிரபலங்கள் விமர்சித்துள்ளனர்.
நடிகர் கட்சிகளை காகிதப்பூக்கள் என்று தெரிவித்திருந்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். அதற்கு பதிலடியாக, தான் பூ அல்ல விதை என்று பதில் அளித்திருந்தார் கமல்.இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், விதை மரபணுமாற்றப்பட்ட விதை. இந்தியாவில் அதை விதைப்பது இல்லை என்று தெரிவித்தார்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், கமல் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. பல கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு தருமாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்துவருகிறார். இது ஒரு கேலிக்கூத்து.பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவரால் ஒருபோதும் தலைவராக முடியாது.
50 வருடங்களாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.நடிகர்கள் வந்துதான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் இருக்கிறார்கள்.
திரைப்படப் போட்டியைப் போல சகோதரர் கமல், அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்குகிறார் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here