ஏர்செல் வாடிக்கையாளர் சிக்கலுக்கு இதோ தீர்வு!

சென்னை: ஏர்செல் வாடிக்கையாளர்கள் தொலைத்தொடர்பு சிக்கலை தீர்ப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெட்வொர்க் இயங்கவில்லை. கால் டிராப் ஆகிறது என்று பரவலாக புகார் எழுந்துள்ளது.
சிலதினங்களாகவே இதுகுறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
விரைவில் ஏர்செல் சேவை நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் பரப்பப்பட்டுவருகின்றன.இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க வேண்டும் என்றும் கம்பெனிகள் சட்டவாரியத்தில் மனுசெய்துள்ளது என்று அதிரடியாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், ஏர்செல் நிறுவனம் இதனை மறுத்துள்ளது.உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை ஓரிரு நாட்களில் சீராகிவிடும்.
அதுவரை கால்டைவர்ட் வசதியை பயன்படுத்தி ஏர்செல் சிம்மின் அழைப்புகளை மற்றொரு சிம்முக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here