ஆந்திர ஏரியில் தொழிலாளர் மூழ்கியது எப்படி? பரபரப்பு தகவல்!!

சேலம்: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஐந்துபேர் ஆந்திர ஏரியில் மூழ்கி இறந்தது எப்படி என்ற விபரம் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கூலி தொழிலாளிகளாக அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் செம்மரம் வெட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்கு அத்தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் அவர்களை ஒருவீட்டில் அடைத்துவைத்து பட்டினிபோட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
அவர்கள் பிடியில் இருந்து இரவில் தப்பித்து ஓடிவரும்போது தொழிலாளர்கள் ஏரியில் சிக்கியுள்ளனர்.

தப்பிவந்தவர்களில் ஒருவரான முருகேசன் என்பவர் இவ்விபரத்தை தனது ஊர்திரும்பியதும் தெரிவித்தார்.
இதனால் தமிழக தொழிலாளர்கள் மரணத்தில் இருந்த சந்தேகம் விலகியுள்ளது.
இந்நிலையில், மரம்வெட்டும் தொழிலாளர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க சேலம் கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்யவும் கலெக்டர் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here