3மாதத்தில் ரூ.6.5கோடி கடனை அடையுங்கள்! ரஜினியின் மனைவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: கோச்சடையான் சினிமா எடுப்பதற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடன் தொகையை 3மாதங்களுக்குள் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ல் ரஜினியின் மகள் சவுந்தர்யா கோச்சடையான் என்ற படத்தை முழுக்கவும் கம்ப்யூட்டர் கிராபிக்சில் எடுத்திருந்தார்.
அப்படத்தில் கதாநாயகனாக ரஜினியும், கதாநாயகியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிராபிக்ஸ் படமான கோச்சடையான் இறுதிக்கட்ட வேலைக்காக பெங்களூரை சேர்ந்த ’ஆட் பிரோ’ என்ற நிறுவனம் ரூ.10கோடி வழங்கியுள்ளது.அதில் ரூ.6.5கோடியை ரஜினி குடும்பத்தினர் நடத்திவரும் மீடியா ஒன் நிறுவனம் பாக்கிவைத்துள்ளது.
பணத்தை உடனடியாக தருமாறு உத்தரவிடக்கோரி ஆட் பிரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அவ்வழக்கில் ரஜினியின் மனைவி லதா இயக்குநராக உள்ள மீடியா ஒன் நிறுவனம் 12வாரங்களுக்குள் ரூ.6.2கோடியை செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here