மாணவிக்கு காதல் பாடம்! 3 ஆசிரியர்கள் கைது!!

விழுப்புரம்: மாணவியிடம் காதலை புரியவைக்க முயன்ற 3ஆசிரியர்கள் கைதாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மேல்நாரியப்பனூரில் அந்தோணியார் பள்ளி இயங்கிவருகிறது.அப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவரும் மாணவி கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
காதலர் தினமான பிப்.14ம் தேதியன்று வழக்கம்போல் பள்ளிக்குவந்தார் கமலா.
அவருக்கு சாக்லெட், ரோஜாக்கள் என்று வாரிவழங்கிய ஆசிரியர் பிரேம்குமார்.
மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாணவியை சக ஆசிரியர்கள் இருவர் சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். பலனில்லை.

இதனைத்தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் பள்ளி வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here