குழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி!

புதுச்சேரி:நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சுத்தம், சுகாதாரத்தை கற்றுத்தரும் கவுசல்யா குழந்தை தலைவர் விருதுபெற்றுள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா.
2012ல் அவரது சமூகத்தினர் வழக்கப்படி கவுசல்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.
அரசு அதிகாரிகளுக்கு இவ்விபரம் தெரியவந்து கவுசல்யாவை மீட்டனர்.தொண்டுநிறுவனம் பராமரிப்பில் உள்ள கவுசல்யா தற்போது கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்துவருகிறார்.
அவ்வப்போது தங்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறார்.                                                        இவருக்கு எரிக் எரிக்சன் விருது அமைப்பினர் குழந்தை தலைவர் என்ற விருது அளித்து கவுரவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here