கமலுடன் சீமான் சந்திப்பு..பேட்டி!

சென்னை: நடிகர் கமல், நடிகர் மற்றும் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்து பேட்டியளித்தனர்.
புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல், பலதலைவர்களை சந்தித்து வருகிறார். அவரை சீமான் இன்று சந்தித்தார்.சந்திப்புக்குப்பின் சீமான் அளித்த பேட்டி: மண்ணின் மக்கள் ஏற்க கூடிய தலைவரான கமல், என்னை சந்திக்க வருவதாக கூறினார். அதனால் எனது சகோதரரான கமலை நான் வந்து சந்திப்பதே மரியாதை. அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படாதா என மக்கள் ஏங்குகின்றனர்.
இருவரும் இணைந்து பணியாற்றுவதை காலம்தான் தீர்மானிக்கவேண்டும்.
மண்ணின் மைந்தனான கமலுடன் இணைந்து பணியாற்ற முன்னுரிமை தருவேன். அதேநேரம் அவரின் திராவிட கருத்தியலுடன் இணைய முடியாது.
தமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஏதும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வோம்.  இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.நடிகர் கமல் இச்சந்திப்பு குறித்து கூறுகையில், எனது கொள்கைகள், கட்சி நோக்கம் வெளியானதும் அதுகுறித்து சீமான் கருத்துக்கள் தெரிவிப்பார்.
தமிழக மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் கட்சி தொடங்குகிறேன்.எனக்கு வாக்குவங்கி இல்லை என்று அரசியலில் மூத்தவர்கள் சொல்கின்றனர். இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
அதிமுக ஆட்சி சரியில்லை என்று விமர்சித்துவரும் நான் அதிமுக தலைவர்களை சந்தித்து புதிய கட்சிக்கு அழைப்பு விடுப்பது சரியாக இருக்காது.  இவ்வாறு கமல் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here