வங்கிகளிடம் கோடி கோடியாய் கடன்! தொழிலதிபர் கைது!!

டெல்லி:பேனா தயாரிப்பில் முன்னணியில் இருந்த ரோடோமேக் நிறுவனத்தின் உரிமையாளர் வரிமோசடி வழக்கில் கைதானார்.6 வங்கிகளில் ரூ.800கோடி அவர் கடன் வாங்கியுள்ளார் என்றும் அக்கடன் தொகை தற்போது ரூ.3ஆயிரத்து 695 கோடியாக உயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோடோமேக் நிறுவனம் பேனா, ஸ்டேஷனரி பொருட்களை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது. வங்கிகளில் கடன்பெற்று தனது பிசினஸை அதிகரித்தது.
சந்தைபோட்டியால் அந்நிறுவனத்துக்கு கடன்சுமை அதிகரித்தது.அதன் தலைவர் விக்ரம்கோத்தாரி தலைமறைவாகி விட்டார் என்று செய்திகள் பரவின.
கடன் தொகைக்காக வங்கிகள் நெருக்கின. வேறு வழியின்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பிச்செலுத்த தயாராக உள்ளேன்.
வங்கிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறேன்.

ஊரையோ, நாட்டையோ விட்டு ஓடிவிடவில்லை. என் தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று எனக்குண்டு.
எனது தொழில்நிறுவனத்தை வங்கிகள் லாபமீட்டமுடியாத நிறுவனம் என்றே அறிவித்துள்ளன. என்று விக்ரம் கோத்தாரி தெரிவித்துள்ளார்.பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் பேங்க், ஓரியண்டல்பேங்க் உள்ளிட்ட 6வங்கிகளில் கோத்தாரி கடன் வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here