அரசியலில் கமல்! விஜயகாந்த் வாழ்த்து!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தனது கட்சி துவக்கவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் கமலஹாசன்.தனது அரசியல் கட்சி துவக்க விழாவுக்கு வருமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று (பிப்ரவரி 19) அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திததார் கமல்ஹாசன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார்.

நீண்டநாள் கழித்து விஜயகாந்தைப் பார்த்தேன். அவரை நலம் விசாரித்தேன்.
அரசியலுக்கு நீங்கள் வரவேண்டுமென்று வாழ்த்தினார் விஜயகாந்த்.
திராவிட அரசியலை முன்னெடுத்து அதில் வெற்றிபெற்றபின் அதற்குரிய வரவேற்புகுறித்து தெரியவரும் என்று பேட்டியளித்தார் கமல்.பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல்ஹாசன், அன்றே மதுரையில் தனது கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here