திமுக தேங்கிவிட்டதா?

சென்னை: திமுக தேங்கிவிட்டது என்று விமர்சித்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவருக்கு திருச்சி சிவா பதிலடி தந்துள்ளார்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு நடந்தது.
அதில் பேசிய மூத்த தலைவர் பிரகாஷ் காரத், திமுக தேக்க நிலையை அடைந்துவிட்டது என விமர்சித்தார்.

இதனால் இருகட்சிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக எம்.பி. திருச்சி சிவா இதுகுறித்து கூறுகையில், “தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குரல் கொடுத்துவருகிறது.
இந்நிலையில் காரத்தின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கான அறிவுரைகளை பிரகாஷ் காரத் கூறலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், மக்கள் ஆதரவையும் கோடிக்கணக்கான தொண்டர்களையும் பெற்றுள்ள திமுகவை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

பிரகாஷ் காரத்தின் இந்த கருத்தை திமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழக மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here