மோசடி வங்கி தலைவர்களுக்கு பாஜக அடைக்கலம்! மம்தா பானர்ஜி புகார்!!

கொல்கத்தா: பல வங்கிகளில் மோசடி நடந்துள்ளதாகவும்,அவற்றின் தலைவர்களை பாஜக காப்பாற்றி வருகிறது என்றும் மேற்குவங்காள முதல்வர் மம்தாபானர்ஜி குற்றம்சாட்டினார்.பரம்பூர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
”பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தற்போது தெரியவந்துள்ளது.
பல வங்கிகள் இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளன. அந்த வங்கிகளின் தலைவர்களுக்கு பாஜக அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.பணம் வாபஸ் திட்டம் கொண்டுவரப்படும் முன்னரே இந்த மோசடி குறித்து திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
பரோடா வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட மற்ற வங்கி அதிகாரிகள் நியமனம் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துள்ளது.
அவர்கள் அளித்துள்ள ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது.மக்களின் பணம் பாதுகாக்கப்படாத வரை, நான் மத்திய அரசை விடமாட்டேன்.
மக்கள் மிகக் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். ஆனால், நிதி தீர்வு மற்றும் காப்பீடு மசோதா என்ற பெயரில் அந்தப் பணத்தை அபகரிக்க மத்திய அரசு முயல்கிறது.
இதை கடுமையாக எதிர்த்து நிதி அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்.

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை,. மக்கள் பணத்துக்காக விலை போக மாட்டார்கள்.
மக்களைக் கட்டாயப்படுத்தி எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஜனநாயகத்தை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here