Connect with us

International

கத்தார் மக்கள் பகடைக்காய்களா! அரசர் ஷேக்தமீம் சீற்றம்!!

Published

on

ஜெர்மனி: கத்தார் மக்கள் என்ன பகடைக்காய்களா? வளைகுடா நாடுகள் இஷ்டம்போல் உருட்டி விளையாடுவதற்கு! என ஆவேசமாக பேசினார் அந்நாட்டு அரசர் ஷேக் தமீம்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஷேக்தமீம் பின் ஹமத் அல்தனி பேசியதாவது:கத்தார் மீது சகோதர நாடுகள் தேவையற்ற தடை விதித்துள்ளன.
எங்கள் மக்கள் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களை புறக்கணித்து எங்கள் இறையாண்மையை பாதுகாத்து வருகிறோம்.
கத்தாரின் பொருளாதாரத்தை வளர்த்து வருகிறோம். வர்த்தகத்துக்கான புதிய வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூன் 5ம் தேதி வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சவுதிஅரேபியா, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடன் ராஜிய உறவை துண்டித்தன.
கத்தார் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டின.
13நிபந்தனைகள் விதித்து கத்தார் அவற்றை ஒப்புக்கொண்டால் உறவு நீடிக்கும் என நிர்பந்தம் செய்தன.

அவையனைத்தையும் புறந்தள்ளிய கத்தார் தனி ஒருவனாக வளர்ச்சி பாதையில் நடைபோட தொடங்கியுள்ளது.
ஜெர்மன் பாதுகாப்பு மாநாட்டில் இதனை சுட்டிக்காட்டிய கத்தார் அரசர், மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு முற்காலங்களில் எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.வருங்காலத்தில் ஐரோப்பிய யூனியன் அமைப்பைப்போன்ற அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator