இளைஞர் மீது தாக்குதல்! எம்.எல்.ஏ. மகன் தலைமறைவு!!

பெங்களூர்: இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய எம்.எல்.ஏ. மகன் தலைமறைவாகியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து 6ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகமது.
சனிக்கிழமை இரவு பிரபல ரெஸ்டாரண்டில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவரை இடம் மாறி உட்காரச்சொன்னார் முகமது.
அதற்கு வித்வாத் என்ற அந்நபர் தனது காலில் காயம் உள்ளதை சுட்டிக்காட்டி தன்னால் இடம் மாற முடியாதுஎன்று தெரிவித்துள்ளார்.

அவரை நண்பர்களுடன் ஓடஓட விரட்டி பலமாக தாக்கியுள்ளார் முகமது.
இதுகுறித்து வித்வாத் போலீசில் புகார் செய்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.தலைமறைவான முகமது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மகன் எங்கே உள்ளான் என்று தனக்கு தெரியாதென்று கைவிரித்துள்ளா ஹாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here