மலையில் மோதியது விமானம்! 66பேர் பரிதாப பலி!!

டெஹ்ராடன்: ஈரானில் பனிமூட்டத்தால் மலையில் மோதியது பயணிகள் விமானம். அதில் இருந்த 60பயணிகள், 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.ஈரான் தலைநகர் டெஹ்ராடனில் இருந்து  யாசுஜ் நகருக்கு அசிமன் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பறந்துகொண்டிருந்தது.
செமிரோம் நகரை கடந்து விமானம் பறந்துகொண்டிருக்கையில் அதன் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த விமான முயன்றார்.
ஆனால், மேகமூட்டமாக காணப்பட்டதால் மலைப்பகுதியில் மோதி விமானம் நொறுங்கியது. இவ்விபத்தில், விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துள்ளனர்.

விமானத்தில் பயணிகளை வழியனுப்ப வந்திருந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்துகிளம்புவதற்கு முன்னரே இச்செய்தி வெளியானது.
இதனால் அனைவரும் விமான நிலையத்தில் சோகமாக திரண்டனர்.

மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தின் இன்ஜின் நன்றாக இருந்ததாகவும், விபத்துக்கான உண்மையான காரணத்தை கருப்புப்பெட்டியை ஆராய்ந்தபின்னர்தான் தெரியவரும் என்றும் அசிமன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here