வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கத்தார் அரசு புதியவசதி !!

கத்தார்: கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டினர் அவர்களது வேலைக்கான ஒப்பந்த நகலை நேரடியாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தார் அரசின் தொழிலாளர் நலத்துறை இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்கு வருவோர் பலவாறு ஆசைகாட்டி அழைத்துவரப்படுகின்றனர்.
இதனால் கத்தார் வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏமாற்றம், அவமானம், மோசடி ஆகியவற்றை சந்திக்க நேர்கிறது.இதனை தவிர்க்கும்பொருட்டு கத்தார் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தொழிலாளர் தனது வேலைக்கான ஒப்பந்தத்தை ஏஜெண்டுகள் உதவியின்றி நேரடியாக பெறமுடியும்.

வேலை ஒப்பந்தத்தின் நகல் ஆங்கிலத்திலும், அரபியிலும் தரப்படும்.
இதன்மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும்.
http://empcont.adlsa.gov.qa/ என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

விசா எண், மொபைல் எண் உள்ளிட்ட விண்ணப்பத்தில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் மொபைலில் பதிவிறக்கம் செய்து பார்வையிட, சேமிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here