காவிரி தீர்ப்பு! சத்யராஜ் எதிர்ப்பு!!

சென்னை: நடிகர்கள் அரசியலில் தோல்வியடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
சென்னையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
ஒரு பிரபல சினிமா நடிகராகவே இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைக்கக்கூடாது.

அவ்வாறு, தனக்கு எல்லாம் தெரியும் என ஒரு நடிகர் நினைப்பதும் தவறு.
நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு.
அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது.
நதியே சமூகத்திற்கு சொந்தமில்லாமல் ஆகிவிட்டது.

முதலில் நதியை சமூகத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் நமக்கான பிரச்சினை இல்லை என்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சினிமாக்காரர்கள் நினைக்க வேண்டாம்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானதாக இல்லை.
அதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here