தினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள்! ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!!

மும்பை: நாட்டில் தினந்தோறும் 6 வங்கி மோசடிகள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
2015ம் ஆண்டு முதல் 2017வரையிலான வங்கி மோசடிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி விபரம் வெளியிட்டுள்ளது.அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி விபரங்கள்:
கடந்த 2015, ஜனவரி 1-ம் தேதி முதல் 2017, மார்ச் 31-ம் தேதி வரை அரசு வங்கிகளில் பணியாற்றும் 5 ஆயிரத்து 200 அதிகாரிகளுக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களில் 12சதவீதம்பேர் சொந்த வங்கியில் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மோசடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டோ, அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டோ அல்லது பணநீக்கம் செய்யப்பட்டோ தண்டிக்கப்படுகிறார்கள்.ஸ்டேட் பேங் ஆப் இந்தியாஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களில் 1,538 பேர் மோசடி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் 449 ஊழியர்கள், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 406 ஊழியர்கள் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் 184 பேர், மற்ற 22 அரசு வங்களில் பணியாற்றுவதில் 2 ஆயிரத்து 409 ஊழியர்கள் மோசடி செய்ததாக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

2013-14ம் ஆண்டில், 76 வங்கிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 305 மோசடிகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 470 கோடியாகும்.
2014-15ம் ஆண்டில் 4 ஆயிரத்து 639 மோசடி வழக்குகள் பதிவாகின இதன் மதிப்பு ரூ.19 ஆயிரத்து 455 கோடியாகும்.
2015-16ம் ஆண்டில் 4 ஆயிரத்து 690 மோசடி வழக்குகள் பதிவாகின, இதன் மதிப்பு ரூ.18 ஆயிரத்து 691 கோடியாகும்.

2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 870 மோசடி வழக்குகள் பதிவான. இதன் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 750 கோடியாகும்.
ஒட்டுமொத்தமாக, கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 2ஆயிரத்து 800 ஊழியர்மீது 17 ஆயிரத்து 504 மோசடி வழக்குகள் பதிவாகின. மோசடிதொகையின் மதிப்பு ரூ.66 ஆயிரத்து 66 கோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here