காவிரி தீர்ப்பு! கவனிக்கப்படவேண்டிய 12 விஷயங்கள்!!

டெல்லி: காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு இன்று வெளியானது.  436பக்க தீர்ப்பில் முக்கிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளதால் பெங்களூருக்கு கூடுதல் 4.77டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. நிலத்தடி நீர்வளம் சிறப்பாக உள்ளதால் தமிழகத்திடமிருந்து 10டிஎம்சி எடுக்கப்பட்டுள்ளது.

1.காவிரி பங்கீடு தொடர்பாக 1892, 1924 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் புறக்கணிக்க கூடியதோ அல்லது நடைமுறைப்படுத்த முடியாததோ அல்ல.

2.மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட 1956ம் ஆண்டு சட்டத்தின்படி, முந்தைய ஒப்பந்தங்கள் யாவும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். கர்நாடக அரசு தனது உரிமையை பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
3.நதிகள் எல்லாம் தேசத்தின் சொத்து. அவை எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல.

4.நதிநீர் பங்கீட்டில் குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
5.தமிழகம் நடுவர் மன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு சரியானவை என தெரியவந்துள்ளது.
6.கேரள அரசு நீர்மின் திட்டத்துக்காக கூடுதல் நீர் தேவை என கோரியிருந்தது நடுவர் மன்றத்தால் ஏற்கப்பட்டது சரியானதே.7.பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் 43ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்பு வைத்துள்ளது. அதற்கு நடுவர் மன்றம் ஒதுக்கிய நீரின் அளவு சரியானதே.
8.சுற்றுச்சூழல் நலன்கருதி காவிரியில் 10டிஎம்சி நீர் விட்டுவைக்க தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்தது ஏற்கப்படுகிறது.9. பெங்களூரின் குடிநீர் தேவையில் 50% நிலத்தடிநீரை சார்ந்துள்ளது. நகரில் மூன்றில் ஒருபங்கு காவிரி படுகைப்பகுதியில் வருவதாலும், நகரம் சர்வதேச அந்தஸ்தைப்பெறுவதாலும் 4.77டிஎம்சி தண்ணீர் கூடுதலாக ஒதுக்குகிறோம்.10.மத்திய அரசு இத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான கண்காணிப்பு அமைப்பை 15ஆண்டு காலத்துக்கான நிரந்தர அமைப்பாக உருவாக்க வேண்டும்.
11.1956ம் ஆண்டு சட்டப்பிரிவு 6ஏ-ன் படி மத்திய அரசு தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

12.தமிழகத்தின் நிலத்தடி நீரை நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. தமிழகத்தில் கிடைக்கும் 20டிஎம்சி நிலத்தடி நீரில் 10டிஎம்சி தண்ணீரை இவ்வழக்கு தொடர்பாக கருத்தில் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here