அரசியல்வாதிகள் சொத்துக்களுக்கு ஆபத்து?!

டெல்லி: அரசியல்வாதிகள் சொத்துக்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், அப்துல்நசீர் ஆகியோரது பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.லோகபரகாரி என்ற தொண்டு நிறுவனம் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தது.
அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் சொத்துக்கணக்கை காட்டவேண்டும் என்று கோரியிருந்தது. மேலும், எம்பி, எம்.எல்.ஏ. தொடர்புடைய நிறுவனங்கள் அரசு, பொதுத்துறை நிறுவனங்களுடன் வணிகத்தொடர்புகொள்ள தடை விதிக்க வேண்டும், அவர்களை பதவிநீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. இம்மனுமீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், வேட்பாளர்கள் பார்ம்26ல் தனது சொத்து விபரத்தை தெரிவிப்பார்கள். இனி அதில் கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்படவேண்டும்.
வேட்பாளரின் கணவர்/மனைவி, குடும்பத்தினர் சொத்து விபரங்கள் குறித்து விபரங்கள் கோரிப்பெறவேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்டகாலத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 3மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

இவ்வழக்கு விசாரணையில், நேரடிவரிவருவாய் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் நாடு முழுவதும் 26மக்களவை எம்பிக்கள், 11மாநிலங்களவை எம்பிக்கள், 247எம்.எல்.ஏ.க்கள் சொத்துகுவித்ததாக தெரியவந்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here