காவிரி தீர்ப்பு! தமிழகம் செய்யவேண்டியது என்ன?

சென்னை: காவிரி வழக்கில்  தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக தெரிந்தாலும் தமிழக விவசாயிகளுக்கான நலனை முழுமையாக பெற்றுத்தரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.  

நடுவர் மன்றம் ஒவ்வொரு மாதமும் காவிரியில் விடுவிக்க வேண்டிய நீரின் அளவை நிர்ணயித்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணிக்கவும், பிலிகுண்டுவில் சேரும் நீரின் அளவை அடிப்படையாக வைத்து  தண்ணீர் அளவை கணக்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

அதன் அடிப்படையில் தண்ணீர் திறப்பை தொடர்ந்து கண்காணித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை கருத்தில் கொண்டே உச்சநீதிமன்றம் காவிரியில் திறக்கவேண்டிய நீரின் அளவை குறைத்துள்ளது.  காவிரி படுகை பகுதிகளில் கூடுதலாகவும், முழுவீச்சில் மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமலாக்கினால் நிலத்தடி நீர் மேலும் அதிகரிக்கும்.

காவிரியில் இருந்து கடலில் சேரும் தண்ணீரை நீரேற்று மையங்கள் உதவியுடன் திருப்பிவிடும் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கலாம். 

காவிரி நீர் முழுவதும் விவசாயத்துக்காகவும், படுகை பகுதியில் குடிநீர் தவிர்த்த பிற உபயோகங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் திட்டத்தையும் கொண்டுவர வேண்டும்.

மெட்ராஸ், மைசூர் மாகாணங்களுக்கு இடையேயான காவிரி ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், கடைமடை பகுதியில் வசிக்கும் தமிழக விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் திறப்பை முறைப்படுத்தி கண்காணிப்பதற்காக அமைக்கப்பட உள்ள காவிரி ஆணையத்தை உடனடியாக அமைத்து தண்ணீர் திறப்பை மாதந்தோறும், பருவந்தோறும் தமிழகம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here