காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு! தமிழக தலைவர்கள் அதிருப்தி!!

சென்னை:காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மாநிலத்துக்கு கூடுதலாக 14.5டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.
புவியியல், சரித்திர ரீதியாக தமிழக உரிமைகளை ஆதாரத்துடன் உச்சநீதிமன்றத்தில் வைக்க அதிமுக அரசு தவறிவிட்டது.தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தீர்ப்பு குறித்து கூறுகையில்,
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. 264 டி எம் சி தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்தபோது, 192 டி எம் சி அளிக்க தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 14. 75 டி எம் சி தண்ணீர் குறைவாக 177.25 டி எம் சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது.பாமக தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
“காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.74 டி.எம்.சி. குறைக்கப்பட்டது மிகப்பெரிய அநீதி. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.1924-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 575.68 டி.எம்.சியாக இருந்தது. இப்போது 404 டி.எம்.சியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்”.
தமிழக அரசு விவசாயிகளுக்கு தண்ணீரை அல்ல கண்ணீரை பெற்றுத்தந்துள்ளது.

நடிகர் கமலஹாசன் கருத்து: தமிழக அரசு விவசாயிகளுக்கு தண்ணீரை அல்ல கண்ணீரை பெற்றுத்தந்துள்ளது.
நடிகர் கமலஹாசன் காவிரிநீர் பகிர்வு குறித்து கூறியதாவது:
காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது; காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here