காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு! கர்நாடகாவுக்கு கூடுதல் நீர் ஏன்?

டெல்லி:கர்நாடகா மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25டி.எம்.சி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனை மேலும் அதிகரிக்க கோரி தமிழகமும், குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடகாவும் வழக்கு தொடர்ந்திருந்தன.
இவ்வழக்கு தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது,
“பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here