ஆண் வேஷமிட்டு 2 பெண்களை திருமணம் செய்த பெண்!

உத்தர்காண்ட்: ஆண் வேஷமிட்டு 2பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் ஒரு பெண்.
உத்தர்கண்ட் மாநிலத்ஹில் உள்ளது தம்புர் நகர். இந்நகரில் வசித்து வருபவர் ஸ்வீட்டி சென். இவர் சிறுவயதில் இருந்தே ஆண்களைப்போன்று ஆடை அணிவது, ஆண்களைப்போன்றே நடந்துகொள்வது என்று இருப்பது வழக்கம்.

பேஸ்புக்கில் கிருஷ்ணா என்றபெயரில் கணக்கு துவக்கிய ஸ்வீட்டி, அதில் ஆண்வேடத்தில் உள்ள தனது படங்களை தொடர்ந்து வெளியிட்டார்.
அதனை பார்த்து விரும்பிய ஹல்த்வானியை சேர்ந்த காமினி என்ற பெண் ஸ்வீட்டியை ஆண் என்றே நினைத்து திருமணம் செய்ய விரும்பினார்.

இருவருக்கும் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் ஸ்வீட்டியின் போக்கே மாறிவிட்டது. குடிப்பது, மனைவியை அடித்து கொடுமை செய்வது என்று நடந்துகொண்டாள்.
2016ல் கலாதுங்கியை சேர்ந்த மற்றொரு பெண்ணும் ஸ்வீட்டியின் வலையில் விழுந்தார்.  இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் காமினி போலீசில் புகார் கொடுத்துள்ளார். தனது கணவர் ஒரு பெண் என்றும் தன்னிடம் ரூ.8லட்சம் மோசடி செய்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது மனைவி நிஷாவும் ஸ்வீட்டியுடன் வாழ மறுப்புத்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here