விமானத்தின் என்ஜின் ஆகாயத்தில் கழன்று விழுந்தது!

சான்பிரான்சிஸ்கோ:வானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினின் மேல்பகுதி கழன்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஹவாய்க்கு யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ்1175 சென்றது.
363 பயணிகளுடன் வானத்தில் பறந்து கொண்டு இருந்தது.  அப்போது விமானம் திடீரென்று குலுங்கி பெரிய சத்தம் கேட்டுள்ளது.

விமானத்தின் வலதுபக்கம் இறக்கைப்பகுதியில் உள்ள என்ஜின் மேல்பாகம் உடைந்து கழன்று விழுந்துள்ளது.
இதனால் விமானம் குலுங்கியுள்ளது தெரியவந்தது. இதனால் பயணத்துக்கு ஆபத்து இல்லை என்று விமானிகள் பயணிகளுக்கு அறிவிப்பு தெரிவித்தனர்.

உடனடியாக விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறக்கப்பட்டது.  பயணிகள் மாற்று விமானத்தில் பத்திரமாக ஊர்களுக்கு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here