அமீரகத்தில் வைரஸ் காய்ச்சல்! டாக்டர்கள் எச்சரிக்கை!!

அமீரகம்: அமீரகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது.
அடுத்த 4வாரம் வரை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமீரகத்தில் இந்த ஆண்டு குளிர்காலம் மிகவும் கடுமையானதாக இருந்தது.

பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் நுரையீரல் வறண்டிருக்கும்.
இது வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி வாழ்வதற்கு ஏதுவாகிவிட்டது.
இதனால் டைப் ஏ, டைப் பி காய்ச்சல், தலைவலி, மயக்கம், உடல்சோர்வு ஏற்பட்டுவருகிறது.டைப் ஏ காய்ச்சல் மிகவும் தீவிரமானது. இதற்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
டைப் பி காய்ச்சலில் உடல் சோர்வுற்றிருக்கும். சத்தான உணவு, மருந்து தரப்படவேண்டும்.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி காற்றில் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, தொற்றுநோய்கள் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மக்கள் உஷாராக இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here