சென்னை: சசிகலா தலைமையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துசெயல்பட வேண்டுமென்று சுப்பிரமணியன்சுவாமி வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் இன்று அவரளித்த பேட்டி: அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். அதிமுக பிரிந்திருந்தால் திமுகதான் ஆட்சிக்குவரும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
திமுக ஆட்சிக்கு வரக் கூடாது. அவர்கள் இந்து விரோதிகள், நாட்டைப் பிரிக்க ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர்.எனவே, அதிமுக அணிகள் இணையவேண்டும். ஆனால் சசிகலா மட்டுமே தலைவராக முடியும். சசிகலா சிறையில் இருந்தபோதே டிடிவி. தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுகவுக்கு டெபாசிட் போயுள்ளது. பாஜகவுக்கு நோட்டாவை விடக்குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன.தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளனர். சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் துர்ப்பாக்கியம் நான் வழக்கு போட்டதுதான்.
கருணாநிதி மீது வழக்கு போட்டிருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். நேரம் இல்லாததால் போடவில்லை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.