பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை வருமா?

டெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆளும் கட்சியான மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அதனை தடைசெய்யுமாறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.இதுகுறித்து உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: இந்தியாவின் மாநிலங்களில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த அமைப்பு தொடர்புடையவர்கள் மீது கேரளாவில்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து அந்த அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரி கேரள மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதுகுறித்து உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகள் குறித்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் தெகன்பூரில் நடைபெறும் மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
அதன் பின் இறுதி முடிவெடுக்கப்படும்”எனக்கூறினார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here