காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு!

புதுடெல்லி: தமிழகமே எதிர்பார்த்துவரும் காவிரி பங்கீடு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.தமிழகம், கர்நாடகா, கேரளா, கோவா இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருந்தது.
நடுவர் மன்றம் 2007ல் இறுதி உத்தரவு வழங்கியிருந்தது. அதில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தமிழகம் சார்பில் மேலும் 50டிஎம்சி தண்ணீர் வழங்க வலியுறுத்தியும், கர்நாடகா சார்பில் 60டிஎம்சி குறைக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன.
இவ்வழக்கில் கேரளா, கோவா மாநிலங்களும் இணைந்துகொண்டன.
இவ்வழக்கை தலைமை நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்துவந்தது.
இவ்வழக்கில் விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைந்தது.

எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
பிப்ரவரி மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், கன்வில்கர் ஆகியோரது பெஞ்ச் நாளை சனிக்கிழமை காலையில் காவிரி வழக்கில் தீர்ப்பளிக்கிறது.

இத்தீர்ப்பை தமிழக டெல்டா விவசாயிகளும், அரசியல் பிரமுகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
நீதிபதி அமித்வராய் ஓய்வு பெற உள்ளதாலும், உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை வருவதாலும் தீர்ப்பு சனிக்கிழமை வெளியாவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here