பெற்ற குழந்தை இறந்தது! மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கும் தாய்!!

டெக்சாஸ்: குறைப்பிரசவத்தால் தனது குழந்தை இறந்ததால் மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்த்துவருகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அம்மா.
டெக்சாஸ் நகரில் வசித்துவருபவர் ஜென்னி. இவரது கணவர் ஹால்.இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் ஜென்னிக்கு ஆபரேஷன் நடைபெற்றது.
குழந்தை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது. இருந்தபோதும் 6வது நாளில் இறந்தது.
ஜென்னிக்கு தாய்ப்பால் அதிகம் சுரந்தது. இதனை அவ்வப்போது சேகரித்து மருத்துவமனையில் இருந்த தாய்ப்பால் வங்கிக்கு அளித்துவந்தார்.

 

அவர் வீட்டுக்கு அருகில் வசித்துவந்த டயானா என்ற பெண்ணும் ஜனவரி மாதம் பெண்குழந்தை பெற்றார்.
டயானாவுக்கு கருப்பையில் கட்டி இருப்பதால் தாய்ப்பால் அதிகம் சுரப்பதில்லை.
இதுகுறித்து தெரியவந்த ஜென்னி தம்பதி, அக்குழந்தை மெரிட்டுக்கு தாய்ப்பால் கொடுக்க சம்மதித்தது.

டயானாவின் குழந்தை மெரிட் அழும்போதெல்லாம் ஜென்னி பாலூட்டுகிறார்.
எங்கள் சோகத்தை போக்கவந்த தேவதை என்று ஜென்னி தம்பதியினர் குழந்தை மெரிட்டை கொண்டாடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here