ரெட்மிநோட்5, ரெட்மிநோட்5புரோ, டிவி! சியோமி நிறுவனம் அசத்தல் அறிமுகம்

மும்பை: சியோமி நிறுவனத்தின் ரெட்மிநோட்5, ரெட்மிநோட்5புரோ ஆகிய 2ஸ்மார்ட்போன்கள், எம்.ஐ. டிவி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 26சதவீதத்தை கைப்பற்றியுள்ளது சியோமி.
ஆண்டுதோறும் புதிய போன்கள், எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்துகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு 3புதியபொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

ரெட்மி நோட் 5 ரூ. 9,999 விலையில், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது.                                                                                                                  ரூ.11,999 விலையில், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் திறனில் கிடைக்கும்.
4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டது.ரெட்மி நோட் 5 புரோ விலை ரூ. 13,999. இது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டது. ரூ, 16,999 விலையுள்ள ரெட்மி நோட் 5 புரோ, 6ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டது.

ரெட்மி நோட் 5 புரோவில் 12 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா டூயல் ரியர் கேமரா உள்ளது.
20எம்பி செல்பி ஸூட்டர் வசதியும் உள்ளது. இந்தபோனில் ‘பேஸ் அன்லாக்’ வசதியும் உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஸியோமியின் ஸ்மார்ட் டிவியும் அறிமுகமாகி உள்ளது.
இந்த டிவி 55 இஞ்ச் திரை மற்றும் 4 கே பேனல், எச்டிஆர்10 வசதிகளுடன் வடிவமைககப்பட்டுளளது. 4.9 எம்எம் அளவில் மெலிதானதாகவும் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.39,999.ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு சலுகைகளை ரெட்மிநோட்5, ரெட்மிநோட்5புரோ வாங்குவோருக்கு அறிவித்துள்ளது.   ரூ.198, ரூ.298க்கு முதல் ரிசார்ஜ் செய்தால் அதே தொகையில் தொடர்ந்து 44ரிசார்ஜ் செய்யும்போது ஒவ்வொரு முறையும் ரூ.50கேஷ் பேக்காக கிடைக்கும். மேலும், ரூ.198க்கு அதிகமாக ரிசார்ஜ் செய்வோருக்கு டேட்டாவை இரு மடங்காகவும் ஜியோ தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here