எக்ஸ்ரே மெஷினுக்குள் கைப்பையுடன் சென்ற பெண்!

சீனா:எக்ஸ்ரே மெஷினுக்குள் கைப்பையுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் உள்ள டங்கன் நகர ரயில் நிலையத்தில் 12வாசல்கள் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாசலிலும் பயணிகளின் லக்கேஜ்களை சோதிக்க எக்ஸ்ரே மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 11ம் தேதி ஒரு பெண் புதுவித கைப்பையுடன் ரயில் நிலையத்துக்கு வந்தாள்.
அவள் பையை எக்ஸ்ரே மெஷின் வழியாக அனுப்பி சோதிக்கவேண்டும் என்று காவலர்கள் கேட்டனர்.

அப்பெண் தரமறுத்தார். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென்று கைப்பையுடன் எக்ஸ்ரே மெஷினுக்குள் தவழ்ந்து சென்ற  அவர் வெளியே வந்தார்.
எக்ஸ்ரே மெஷின்கள் அவர் கைப்பையுடன் இருப்பதை படமெடுத்தன.
இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.

எக்ஸ்ரே மெஷினுக்குள் சென்றால் கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கநேரிடும் என்றும், இதுபோன்று யாரும் செய்யக்கூடாது என்றும் ரயில்நிலையத்தில் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
எக்ஸ்ரே மெஷினுக்குள் பையுடன் சென்ற பெண் மியாங்(27) என்றும், அவர் பை நிறைய பணம் வைத்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here