ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அட்டவணை வெளியீடு!!

மும்பை: உலகம்முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் விவோ ஐபிஎல் 2018போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 51நாட்கள் நடைபெறுகின்றன.
9மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன.


இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மே 27 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here