அரசியல் களத்தில் கமல்!! மோடி எதிர்ப்பே ஒற்றை ஆயுதம்!!

போஸ்டன்: மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதத்துடன் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் நடிகர் கமலஹாசன்.                                                                            பிப்ரவரி21ம் தேதி தனது அரசியல் கட்சி, கொள்கைகளை அறிவிக்கவுள்ளார் கமல்.
இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரசியல், சமூகமேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் மாதிரி கிராமங்களை உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார். அக்கிராமங்களில் சுகாதாரம், கல்வி, மின்சக்தி, சுத்தமான குடிநீர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளார்.

இந்தியாடுடேவுக்கு கமல் அளித்த பேட்டி விபரம்: எனது அரசியலின் நிறம் கருப்பு. தமிழக மக்கள் கருப்பு நிறத்தை அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்படுத்துவதில்லை. அவர்களது கலாச்சார தொடர்புடைய நிறம் அது.பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தில் பிறந்து வளர்ந்துள்ளேன். அது சிறப்பாகவே என்னை உருவாக்கியுள்ளது. அதற்காக மாற்றத்தை வெறுப்பவனல்ல நான். ஆனால், ஒற்றைச்சமூகம் என்ற மாற்றத்தை ஆதரிப்பவன் அல்ல. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவின் ரசிகன் நான்.

இந்து தீவிரவாதம் என்பது எல்லோருக்கும் கவலை அளிக்கிறது. அதனை ஊக்குவிக்க கூடாது. நமது மதிப்பீடுகளை நாம் காப்பாற்றவேண்டும். அதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஒன்றே வழி.அதற்காக நான் ஹிந்து விரோதி அல்ல. தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியில் காவி நிறம் இருந்தால் அதனுடன் கூட்டணி இல்லை. அதேநேரம் அவரது கட்சியின் கொள்கைகளும் ஒத்துவந்தால் பார்த்துக்கொள்ளலாம்.இரு படங்களில் நடித்துவருகிறேன். அரசியல் பிரவேசத்துக்குப்பின் நடிக்க மாட்டேன்.
அரசியலில் ஒருவேளை தோல்வியுற்றால் அதன்பின் நடிப்பை பற்றி பரிசீலிப்பேன்.
வங்கிக்கணக்கில் பணம்சேர அரசியலுக்கு வரவில்லை.
நடிகனாக இறக்க விரும்பவில்லை. மக்களுக்கு தொண்டுசெய்து நிறைவுடன் இறக்க விரும்புகிறேன். அதற்காகவே அரசியலில் இறங்கியுள்ளேன்.37ஆண்டுகள் சமூகசேவையில் எனது ரசிகர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 10லட்சம் தொண்டர்கள் உள்ளனர். தினந்தோறும் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்துவருகிறது.
இவ்வாறு கமல் பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here