அழகில்லை என்பதால் திருமணம் ரத்து! மணமகன் செய்கையால் கதறியழுத மணப்பெண்!!

சீனா:மணப்பெண்ணின் வயதான தோற்றத்தால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை ரத்துசெய்தார் வாலிபர். இதனால் அப்பெண் நடுரோட்டில் கதறி அழுதது காண்பவர்கள் மனதை கனக்க வைத்தது.டங்கன் நகரை சேர்ந்தவர் குவாசியான்(28). மார்க்கெட்டிங் துறையில் வேலைபார்த்து வரும் இவர் இணையத்தின் வழியாக ஒரு பெண்ணை காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
திருமணம் நடைபெறவிருந்த ஓட்டலுக்கு மணப்பெண் அலங்காரத்தில் குவாசியானின் காதலி குயிங்காவா(26) வந்தார்.

குயிங்காவாவை முதன்முறையாக நேரில் பார்த்த அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்தார்.
குயிங் முதிர்ச்சியடைந்த பெண்ணாக காணப்பட்டார்.இதனால் வருத்தமுற்ற குவாசியான் முதலில் உன் மேக்கப்பை கலைத்துவிட்டு வா. உன் உண்மையான வயது என்னவென்று எனக்கு தெரியவேண்டும். அப்புறம் திருமணம் செய்வதைப்பற்றி யோசிக்கலாம் என்றார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது.கோபத்தில் திருமணம் வேண்டாம் என்று குவான்சியான் கிளம்பிச்சென்றார்.
இதனால் வருத்தமுற்று நடுவீதியில் குயிங்காவா கதறியழுதார்.
இந்தவிடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.
குயிங்காவாவின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here