அதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்!

தஞ்சாவூர்: அதிமுக குட்டையை குழப்பி ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்.
தஞ்சாவூரில் தினகரன் அணியின் வக்கீல்பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் தினகரன் பேசுகையில், வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் பேசிய தினகரன், “ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றவுடனேயே புதிய கட்சியைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி, யாராவது ஒருவர் புதிய கட்சியைத் தொடங்கினால், அவரது அடிப்படை உறுப்பினர் தகுதி தானாகவே காலாவதியாகிவிடும்.

இரட்டை இலைச் சின்னம், கட்சி ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில், புதிய கட்சியைத் தொடங்கினால் வழக்கிலிருந்து விலகிக்கொண்டது போலவும் ஆகிவிடும். அவ்வழக்குகளில் தீர்ப்பு விரைவில் வெளிவரும்.

தற்போது கட்சிக்குப் பெயர், சின்னம் இல்லை என்பதால், புதிய பெயர் மற்றும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். இதன் தீர்ப்பு விரைவில் வரும்” என்றார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர்,  ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பன்னீர்செல்வமே காரணம்.
அவரது சுயநலத்தால்தான் அதிமுக தோல்வியடைந்தது. அவர் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.

எந்த தினகரனால் அவர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வராக ஆக்கப்பட்டாரோ அந்தத் தினகரனாலேயே ஓரங்கட்டப்படுவார். அவரது பழைய தொழிலைத் தொடங்குவதற்கு நிச்சயம் ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு அதிமுக அமைச்சர் ஒருவர் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் வேட்பாளர் மதுசூதனன். தனக்கு எதிராக வேலைபார்த்தவர்களை கட்சியில் இருந்தே நீக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்திவருகிறார்.

இந்நிலையில், மதுசூதனன் இடம்பெற்றிருந்த அணியின் தலைவராகிய பன்னீர்செல்வத்தையே தினகரன் குற்றம் சாட்டியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here