ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்! போலீசார் தாக்கி மாணவர் காயம்!!

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளனர்.11ம் தேதி உண்ணாவிரத போராட்டம் முடிந்தது எம்ஜிஆர் பூங்கா அருகே விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுடன் உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் அதிகாரிகள் மக்களை தாக்கியதாக தெரிகிறது.
இவ்விஷயம் தெரியவந்ததும் தூத்துக்குடி சிதம்பர நகர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ், “பள்ளிக்கூடத்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது தவறு.

மாணவர்களின் படிப்பு தடைபடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுத்தினால் மாவட்டக் கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here