தாய் இறந்தது தெரியாமல் உடன் தூங்கிய மகன்!

ஹைதராபாத்: அரசு மருத்துவமனையில் தாய் இறந்தது தெரியாமல் அவருடன் தூங்கியுள்ளான் ஐந்து வயது சிறுவன்.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது ஹைதராபாத் உஸ்மானியா அரசு தலைமை மருத்துவமனையில்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சமீனா சுல்தானா(36) என்ற பெண் மகனுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சுவாச பிரச்சனை இருந்துள்ளது.
டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளார்.

காலையில் மருத்துவர்கள் வந்து பார்த்தபோது உயிர்பிரிந்திருந்த தாயுடன் கட்டிலில் மகனும் படுத்திருந்தார்.
டாக்டர்கள் அவரை எழுப்பமுயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை.

சமீனாசுல்தானா 3ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து மகனுடன் தனியே வசித்து வருகிறார்.
வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்துவருகிறார்.
அவரது இறுதிச்சடங்குக்கான உதவிகளை ஹெல்பிங் ஹேண்ட் அறக்கட்டளை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here