சேலையணிந்து ஸ்கைடைவிங்! இந்தியப்பெண் சாகசம்!!

புனே:விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கைடைவிங் சாகசத்தை சேலை அணிந்து வெற்றிகரமாக செய்துள்ளார் சீத்தல் ரானே மகாஜன்.
ஸ்கைடைவிங் சாகசத்தில் ஈடுபடுவோர் உடலை ஒட்டிய ஆடைகள் அணிந்து ஈடுபடுவார்கள்.

ஆடைகளால் பறக்கும்போது இடைஞ்சல் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள்.
மகாராஷ்டிரா பெண்கள் அணியும் நவ்வாரி சேலை 8.25மீட்டர் நீளமுடையது.
அவ்வளவு நீளமுள்ள சேலை அணிந்து பெண் ஒருவர் ஸ்கைடைவிங்கில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும்.

தாய்லாந்தின் பட்டயா நகரில் சேலையணிந்து 13ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்துள்ளார் மகாஜன்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமாக செய்யவேண்டும் என்பதற்காக இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.இதுவரை 704முறை ஸ்கைடைவிங் செய்து தேசிய,சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார் இவர். பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here