கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி! போலீசில் சரண்!!

சென்னை:கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
சென்னையில் பிரபலமாகி வரும் ரவுடிகளில் ஒருவர் பினு. கடந்த 6ம்தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்றனர். அரிவாளால் அவர் கேக்வெட்டி கொண்டாடியபோது போலீசார் வந்தனர்.அவர்களிடம் 74ரவுடிகள் சிக்கினர். பினு உள்ளிட்ட பலர் தப்பிச்சென்றனர்.
அரிவாளால் பினு கேக்வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி பீதியூட்டின. பினுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும்பணி தீவிரமாக நடந்தது. அவரை துப்பாக்கியால் சுட்டும் பிடிக்கும் அதிகாரம் போலீசார் பெற்றிருந்ததாக கூறப்பட்டது.இதனால் என்கவுண்டரில் போலீசார் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் பினுவுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், பினு, அம்பத்தூர் காவல் துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.

 

நான் பெரிய ரவுடி ஒன்றும் இல்லை. கரூரில் அமைதியாக இருந்த தன்னை வலுக்கட்டாயமாக சென்னை வரவழைத்து சிக்கவைத்துவிட்டனர்.
தனக்கு சுகர் உள்ளது. பெரிய குற்றங்கள் எதையும் நான் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் அவர். அவர் மீதான 28வழக்குகள் தூசிதட்டப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here