காதல் சொல்லி தருகிறார்!

திருவனந்தபுரம்:காதலர்கள் கொண்டாடுவதற்காக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது ’ஒரு அட்டகாச காதல்’படக்குழு.
மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஒமர்லுலு இயக்கத்தில் தயாராகி வருகிறது ஒரு அட்டகாச காதல்(ஒரு அடார லவ்). அதில் ஐந்து ஜோடிகள்.

பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் த்வனே நடித்துள்ள ஒரு நிமிட காட்சி இணையத்தில் வெளியானதும் அன்றைய தினத்தில் இருந்தே காதலர் தினத்தை கொண்டாட தொடங்கினார்கள்இணையவாசிகள்.

ப்ரியாபிரகாஷ்வாரியார் திருச்சூரை சேர்ந்தவர். அங்குள்ள விமலா கல்லூரியில் பிகாம் முதல்வருடம் படிக்கிறார். பாட்டி வீட்டில் தம்பியுடன் தங்கியிருந்து படித்து வருகிறார்.
2குறும்படங்கள் வெளியாக சமூக ஊடகம் இவரை கொண்டாடியது. ஒருநாள் இயக்குநர் ஒமர்லுலுவிடம் இருந்து அழைப்பு வந்தது. மேக்கப்டெஸ்ட் எடுத்ததும் ஓகேயானார்.

ரோஷன் த்வனே சிறந்த டான்சர். குருவாயூர் கல்லூரியில் பிசிஏ படித்துவருகிறார். வாய்ப்புக்காக ஒமரை சந்தித்தபோது உடனடியாக நடிக்க வைத்துவிட்டார்.
புருவத்தை வளைப்பது. உதட்டில் மகிழ்ச்சியை கொண்டுவருவது எல்லாம் இயக்குநரின் வழிகாட்டுதல்தானாம்.அட்டகாச காதல் படத்தில் இயக்குநர் காதலை கற்றுத்தருகிறார். அவர் சொல்படியே நாங்கள் நடக்கிறோம். ஆனால், எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்கிறது பிரியா-ரோஷன் ஜோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here