ஒலிம்பிக் விழா! ஆடை விலகினாலும் மானத்துடன் ஆடிய பெண்!!

தென்கொரியா:குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் உள்ள பியாங்க்ஜங் நகரில் நடந்து வருகின்றன.
துவக்கவிழா நிகழ்ச்சியில் பிரபல ஸ்கேட்டர் யூராமின் தனது துணையான அலெக்சாண்டர் கேம்லிங்குடன் பங்கேற்றார்.
துவக்கவிழா ஆட்டத்துக்காக ஆறுமாதம் கடும் பயிற்சிசெய்தார். பனிக்களமே கதி என்றிருந்தார்.

ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இவர் ஆடத்துவங்கினார்.
அப்போது அவரது மேலாடை பலமுறை உடலில் இருந்து நழுவியது.
அதனை அவரது பார்ட்டனர் அலெக்சாண்டர் ஆடும்போதே உணர்த்தினார்.உடனடியாக சுதாரித்துக்கொண்ட யூரா ஆடியவாறே தனது மேலாடையை சரிசெய்தார்.
ஒவ்வொரு முறை சுழன்றாடும்போதும் அவரது மேலாடையில் கவனம் வைத்தவாறே அவர் பிசகாமல் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

அலெக்சாண்டரின் மீதேறி பனிச்சறுக்கும்போது அவரது ஆடைகள் விலகாமல் இருக்க கடும் பிரயத்தனம் செய்து அதில் வெற்றிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here