மாப்பிள்ளை வந்த கார் தறிகெட்டு ஓடியது! திருமண கோஷ்டியினர் 22பேர் படுகாயம்!!

சட்டீஸ்கர்: திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையின் கார் தறிகெட்டுவந்து மோதியதில் 22பேர் காயமுற்றனர். சட்டீஸ்கர் மாநிலம் ஜஞ்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ளது சுர்தலா கிராமம்.அக்கிராமத்தை சேர்ந்த மிலன் சந்திரா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்துக்காக மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.
மாப்பிள்ளையை அவரது நண்பர் தனது ஸ்போர்ட்ஸ் காரில் ஊர்வலமாக அழைத்துவந்தார்.

அந்நண்பர் குடித்துவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஊர்வலம் ஒரு வளைவை எட்டியது. அப்போது காரின் பிரேக்கை பிடிப்பதற்கு பதிலாக போதையில் நண்பர் ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார்.

இதனால் நொடிப்பொழுதுக்குள் கார் திருமண கோஷ்டிமீது பாய்ந்தது.8பெண்கள், 5குழந்தைகள் உள்ளிட்ட 22பேர் காயமுற்றனர்.
ராஜ்காட் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here