இளம்பெண் கண்களில் இருந்து 14புழுக்கள் அகற்றம்! பகீர் தகவல்!!

ஓரிகான்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் கண்ணில் இருந்து 14புழுக்கள் அகற்றப்பட்டன.
ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த அபே பெக்லி(26) என்ற பெண்ணின் கண்களில் இருந்து ‘திலாசியா குலோசா’ என்ற புழுக்கள் நீக்கப்பட்டன.

20நாட்கள் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்று புழுக்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன.
இந்நோய் கால்நடைகளைத் தாக்கும் கண் நோயாகும். இந்நோய் தாக்குதலால் பசு, குதிரை ஆகியவற்றின் கண்களில் புழுக்கள் இருக்கும்.

இதனால், பார்வை மந்தம், கண்ணீர் தொடர்ந்து வடிதல், கண்ணில் தொடர்ந்து அழுத்தம் ஆகியவை ஏற்படும்.
அபே பெக்லி கடந்தாண்டு தனது விடுமுறையை கொண்டாட கோல்டு கடற்கரை பகுதிக்கு சென்றார்.
அங்குள்ள உறவினரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இவர் வசித்தபகுதியில் மாட்டுத்தொழுவம் இருந்தது. மேலும் கடற்கரையில் தொடர்ந்து குதிரையேற்றத்திலும் ஈடுபட்டு வந்தார்.

இதனால் கால்நடைகள் வாயிலாக இந்நோய் இவருக்கு பரவியிருக்கலாமென கருதப்படுகிறது.
வீடு திரும்பிய அபே பெக்லி கண்ணாடியில் தனது கண்களை பார்த்தபோது அதில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கண்களில் இருந்து 14புழுக்கள் அகற்றப்பட்டன.
கால்நடைகளின் கண்களில் காணப்படும் இப்புழுக்கள் முதன்முறையாக பெண்ணின் கண்களில் இருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here