உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு, ஆண்டாள் சர்ச்சையில் பாஜகவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தார் விஜயகாந்த்.
இதனால் தேமுதிக பாஜகவுடன் நெருங்கிவருவதாக பேச்சு எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக காலூன்றவும் முடியாது, கையூன்றவும் முடியாது என தெரிவித்திருந்தார் விஜயகாந்த்.அவரது மனைவியும், தேமுதிக மகளிரணி செயலாளருமான பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
“நீட் மற்றும் ஆண்டாள் விவகாரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் பாஜகவிற்கு ஆதரவு என்று கூறிவிடுவது. எதிராகக் கருத்து தெரிவித்தால் மற்றொரு கட்சிக்கு ஆதரவு என்று முடிவு செய்துகொள்ளக் கூடாது.பாஜக மட்டுமல்ல யாருடனும் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.
ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் அவருடைய படத்தை பேரவையில் வைப்பதை ஏற்றுக்கொண்டிருப்போம்.தேமுதிகவுக்கென்று ஒரு கொள்கை உள்ளது.எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் சொல்கிறோம். இவ்வாறு பிரேமலதா பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here