அதிக சொத்து…அதிக வழக்கு! முதல்வர்களில் முதல்வர்கள் யார்?..யார்?

மும்பை:மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது 22கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிக சொத்துக்களை உடையவராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆர்டிஐ-ல் முதலமைச்சர்கள் குறித்த தகவல் பெற்று வெளியிட்டுள்ளது.அறிக்கையில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் மீது 22கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், அவற்றில் 3வழக்குகள் மிகவும் கவனிக்கத்தக்கவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயிவிஜயன் மீது 11வழக்குகளும், டெல்லி முதல்வர் கேஜரிவால் மீது 10வழக்குகளும் உள்ளன.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜம்முகாஷ்மீர் மெகபூபாமுப்தி ஆகியோர் மீதும் தலா ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள முதல்வர்களில் அதிக சொத்துக்களுடன் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 177 கோடி ஆகும்.

அடுத்த இடத்தை பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு வகிக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி. 48 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
22முதல்வர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மிக குறைந்த சொத்துக்கள் உடையவராக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 கோடியே 80 லட்சம் ரூபாயுடன் 12ஆவது இடம் வகிக்கிறார். புதுவை முதல்வர் நாராயணசாமி 9 கோடி ரூபாயுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here